ARTICLE AD BOX
திட்டக்குடி: ராமநத்தம் அருகே மினி லாரி மோதி 30 ஆடுகள் உடல் நசுங்கி பலியாகின. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் அரியாங்குடி பகுதியை சேர்ந்தவர் பாலார் மகன் முருகேசன்(45). இவர் குடும்பத்துடன் ஆண்டுதோறும் ஆடுகளை லாரியில் ஏற்றி பல இடங்களுக்கு கொண்டு சென்று அங்கு விளைநிலங்கள் அருகில் கொட்டகை அமைத்து அப்பகுதியில் மேய்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில் ராமநத்தம் அருகே கொட்டகை அமைத்து சில நாட்களாக அப்பகுதியில் மேய்சலுக்கு விட்டு வந்துள்ளார். வழக்கம்போல நேற்று காலை செம்மரி ஆடுகளை முருகேசன் ராமநத்தம்- கொரக்கவாடி செல்லும் சாலையில் மேய்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக கடலூர் மாவட்டம் கொரக்கவாடி காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த ஓட்டுநர், லட்சுமணன் மகன் கார்த்திக்(28) என்பவர் மினி லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் சென்ற செம்மரி ஆடுகள் மீது மோதியது. இதில் 30 ஆடுகள் மினி லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தன. இதுகுறித்து தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் ஆடுகளின் உரிமையாளர் ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கு இறந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post ராமநத்தம் அருகே பரபரப்பு; மினி லாரி மோதி 30 ஆடுகள் உடல் நசுங்கி பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.