ARTICLE AD BOX
ராபின்ஹூட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தார்.
தெலுங்கில் வெங்கி குடுமுலா இயக்கி வரும படம் ராபின்ஹூட். இதில் நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தின் மூலம் டேவிட் வார்னர் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படம் மார்ச்.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்: அன்புமணி
குறிப்பாக, பல தெலுங்கு பாடல்களுக்கு நடனமாடியும் ரீல்ஸ் விடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டும் கவனம் பெற்றார். இதனிடையே படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தார். அவருக்கு படக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.