ARTICLE AD BOX
ராதிகாவை இனியா திட்ட பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா அம்மா அப்பாவை கூட இருக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, பாக்கியா போகும்போது கோபி ராதிகாவையும் அழைத்து சென்று விடுகிறார் இதனால் இனியா ஸ்டேஜில் அசிங்கப்படுகிறார். உடனே அங்கிருந்து மூவரும் வர இனியா அதையே நினைத்து அழுகிறார். பாக்கியா சாரி என்று சொல்ல நீ எதுக்குமா சாரி கேக்குற நீ எந்த தப்பும் பண்ணல நான் தான் உன் பக்கத்துல இருக்கணும்னு கூப்பிட,ஆனா தேவையில்லாதவங்க வரும்போது எனக்கு அசிங்கமா ஆயிடுச்சு என்று சொன்னது கண் கலங்குகிறார்.
பாக்கியா இனியாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, கோபி வருகிறார் ஆனால் இனியா கோபியிடம் கோபமாக நடந்து கொள்ள என்ன தனியா விடுங்க என்று சொல்லிவிட்டு இனிய சென்று விடுகிறார். சோகமாக இருக்கும் நேரத்தில் அவர்கள் தோழிகள் வந்து இனியாவை இன்னும் வெறுப்பேற்றுகின்றனர்.
இதனால் இனியா அப்செட் ஆகவே இருக்கிறார் டான்ஸ் காம்பெடிஷன் தொடங்க மூன்றாவது ஆளாக இனியவை கூப்பிடுகின்றனர் ஆனால் இனியா நடந்ததை நினைத்து பாட்டு வந்த பிறகும் ஆடாமல் அமைதியாக நிற்க கோபி ஆடச் சொல்லி சொல்லுகிறார். கொஞ்ச நேரம் கழித்து ஆடிய இனியா திரும்பவும் நின்று சரியாக டான்ஸ் ஆடாமல் விட்டுவிட்டு ஆடுகிறார். இதனால் நடுவர்களின் முகம் மாறுகிறது.
பிறகு அனைவரின் டான்ஸ் முடிந்த பிறகு ரிசல்ட்டை அனௌன்ஸ் பண்ணுகின்றனர் அதில் 3 இடத்தை இனியா பிடிக்க குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இனியாவும் அதிர்ச்சியில் கண்கலங்குகிறார். பிறகு முதலாவதாக வாங்கிய டிராபியை பார்த்து கண் கலங்கி இனியா அழுகிறார்.
கோபமாக வீட்டுக்கு வந்த இனியா பொக்கேவை தூக்கி வீசுகிறார். பிறகு கோபி சமாதானம் செய்ய நீங்க எதுக்கு இவங்கள கூட்டிட்டு வந்தீங்க. இவங்களால தான் நான் ஜெயிக்கல என்று சொல்ல , தேர்டு பிரைஸ் கூட நல்ல விஷயம் தான் இனியா என்று சொல்ல அப்போ இன்னைக்கு நடந்த விஷயத்துல உங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்ல அப்படித்தானே என்று இனியா கேட்கிறார். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை கேட்டாங்க தெரியுமா முதல்ல தெருவுல ஃபேமஸ் ஆனீங்க , ஸ்டேஜ்ல இப்போ பேமஸ் ஆகறீங்களான்னு கேக்குறாங்க என்றெல்லாம் பேசுகிறார். எனக்கு எவ்வளவு அசிங்கமா இருந்துச்சு தெரியுமா இவங்களை எதுக்கு டாடி நீங்க கூட்டிட்டு வந்தீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கோபி எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறார் ஈஸ்வரி இவளுக்கு என்ன தகுதி இருக்குனு மேடை ஏறி வந்தால் இவளா இனியாவிற்கு அம்மா என்றெல்லாம் ஈஸ்வரி பேசுகிறார்.
இனியாவின் கேள்விகளுக்கு ராதிகா பதில் என்ன சொல்லப் போகிறார்? பாக்யா கேட்ட கேள்வி என்ன? அதற்கு ஈஸ்வரி என்ன பதில் சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
The post ராதிகாவை திட்டி தீர்த்த இனியா,பாக்யா சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.