ARTICLE AD BOX
முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை இயக்கி ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
கடந்தாண்டு ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தை சதய்ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது விஷ்ணு விஷாலின் 21ஆவது படமாக உருவாகிவருகிறது.
கடைசிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதன் முதல் பார்வை போஸ்டர், படத்தலைப்பு இன்று (மார்ச்.15) மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.
ராட்சசன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.