ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

3 hours ago
ARTICLE AD BOX

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவான பல்ஜீத் சிங்குக்கு எதிரான பணமோசடி விசாரணையில் அமலாக்கத் துறை பல இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் தௌசா மற்றும் ஹரியாணாவில் உள்ள ரேவாரி உள்பட மொத்தம் ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

பெஹ்ரோரின் (ராஜஸ்தான்) முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக பல்ஜீத் சிங் இருந்தார். அவருக்கு எதிரான வழக்கில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை தொடர்பாக முன்னாள் எம்எல்ஏவை உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகக் கூறி எம்எல்ஏ நிதியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Entire Article