ARTICLE AD BOX
ஐதராபாத்: ஐபிஎல் தொடரில நாளை 2 போட்டிகள் நடக்கிறது. ஐதராபாத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் 2வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்குகிறது. சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி என அதிரடி வீரர்கள் உள்ளனர். பவுலிங்கில் கேப்டன் பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்சல் பட்டேல் வேக கூட்டணி மிரட்டும். சுழலில் ஆடம் ஜாம்பா, ராகுல்சாகர் இடம்பெறக்கூடும். மறுபுறம் ராஜஸ்தான் அணியை ரியான் பராக் வழிநடத்துகிறார்.
காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் சஞ்சு சாம்சன் இம்பாக்ட் வீரராக ஆட உள்ளார். ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ஹெட்மயர், நிதிஷ்ரானா பேட்டிங்கிலும், சோப்ரா ஆர்ச்சர், துசார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, வனிந்து ஹசரங்கா, தீக்ஷனா பவுலிங்கிலும் முத்திரை பதிக்கலாம். சொந்த மண்ணில் புதிய சீசனை வெற்றியுடன் தொடங்க சன்ரைசர்ஸ் ஆயத்தமாக உள்ளது. அதற்கு கடும் சவால் அளிக்க ராஜஸ்தான் காத்திருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 11ல் சன்ரைசர்சும், 9ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன. கடந்த சீசனில் மோதிய 2 போட்டியிலும் சன்ரைசர்ஸ் தான் வென்றது குறிப்பிடத்தக்கது.
The post ராஜஸ்தானுடன் நாளை மாலை மோதல் வெற்றியுடன் தொடங்குமா சன்ரைசர்ஸ்? appeared first on Dinakaran.