ராஜஸ்தானில் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!

3 hours ago
ARTICLE AD BOX

ராஜஸ்தானில் இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகம் முன்பாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் அவினாஷ் கெலாட்டுக்கு எதிராக, ராஜஸ்தான் சட்டபேரவையில் கடந்த பிப். 21 ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 6 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் அறிவித்தார். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்று கூறினார். அன்று இரவு முழுவதும் 6 எம்எல்ஏக்களும் பேரவை வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று அவர்கள் சட்டப்பேரவை வளாகம் முன்பாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?

இன்று காலை சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைந்த இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் அவை நடைபெறும் பகுதிக்கு வெளியே இருப்பார்கள் என்று அவைத்தலைவர் பதிவில் இருப்பதாகவும் ஆனால் தற்போது எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் இந்த உத்தரவு அவைத் தலைவரின் அறிக்கைக்கு எதிரானது ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.

நாங்கள் நினைத்தால் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றும் இடைநீக்கம் செய்யப்படாத எம்எல்ஏக்களும் பேரவை வாயிலில் நிறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

Read Entire Article