ARTICLE AD BOX
அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஒருவேளை இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்ற பேச்சும் இருந்து வந்தது. அதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சுக்களும் அதிகளவில் இருந்து வந்தது.
ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு அட்வைஸ் வழங்கிய : ஆகாஷ் சோப்ரா
ஏனெனில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வந்தால் ரோஹித் சர்மா 38 வயதை நிறைவு செய்வார். இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் விடைபெற இதுவே சரியான தருணம் என்றும் எனவே ரோகித் சர்மா கோப்பையை கைப்பற்றியவுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்றும் பேசப்பட்டு வந்தது.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் அளித்த பேட்டியில் ரோகித் சர்மா தற்போதைக்கு தான் ஓய்வு பெறும் முடிவில் இல்லை என வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அனுபவ வீரர்களாக இருக்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோபா அவர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா தற்போது ஓய்வு பெறவில்லை என்று அறிவித்து விட்டதால் 2027 உலக கோப்பைத் தொடரில் விளையாடுவார் என்று தெரிகிறது. இது நல்ல விடயமாக இருந்தாலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் இடையில் இருப்பதனால் அவருக்கு இது சற்று கடினமான காலமாகவே இருக்கும். ஏனெனில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் இளம் வீரராக மாறப் போவது கிடையாது. தொடர்ந்து விளையாட நினைத்தால் அவர்களது வயதும் கூடிக் கொண்டே செல்லும்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் முன்னாள் வீரரான ராகுல் டிராவிடை போன்று அதிக பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவேன். ஏனெனில் ராகுல் டிராவிட் வயதாக வயதாக தான் அதிகமாக பயிற்சிகளில் ஈடுபட்டார். அப்படி அவர் செய்ததற்கு காரணம் யாதெனில் வயதாக ஆக உடற்தகுதியை சரியாக பராமரித்தால் தான் சிறப்பாக விளையாட முடியும் என்ற கொள்கையை டிராவிட் பின்பற்றினார். அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டிராவிடன் அந்தக் கொள்கையை பின்பற்ற வேண்டும்.
இதையும் படிங்க : இன்னைக்கு நான் இப்படி கம்பேக் கொடுத்து அசத்த அவர்மட்டும் தான் காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் கருத்து
அப்படி செய்தால் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தங்களது உடற்தகுதியை உறுதி செய்ய முடியும். தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 2027 50 ஓவர் உலக கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் விளையாடினால் அது நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல விடயம் தான் இருந்தாலும் அதற்கிடையில் இரண்டு ஆண்டுகள் என்கிற நீண்ட நெடிய பயணம் அவர்களுக்கு கடினமாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.
The post ராகுல் டிராவிட் பண்ணதை நீங்களும் பண்ணுங்க.. ரோஹித் கோலிக்கு அட்வைஸ் கூறிய – ஆகாஷ் சோப்ரா appeared first on Cric Tamil.