ARTICLE AD BOX
ராகு-சனி சேர்க்கையால் உருவாகும் அழிவுகரமான யோகம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Saturn Rahu Conjunction In Pisces 2025: வேத ஜோதிடத்தின் படி, நீதிமான் சனி பகவானும், நிழல் கிரகமான ராகுவும் 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் ஒன்றிணைந்து மீன ராசியில் பயணிக்கவுள்ளனர். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையினால் அழிவுகரமான யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார். இதனால் மார்ச் 29 முதல் மீன ராசியில் பிசாசு யோகம் என்னும் அழிவுகரமான யோகம் உருவாகவிருக்கிறது.

இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கவுள்ளனர். மேலும் பண பிரச்சனைகளையும், ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது மீன ராசியில் நிகழும் ராகு சனி சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கையினால் அழிவுகரமான யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் சந்திக்க நேரிடும. தாய் மாமா, தந்தைவழி மாமாவுடனான உறவு மோசமடையக்கூடும். மேலும் உறவினர்களுடன் நிறைய வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். இந்த வாக்குவாதம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே பேசும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதோடு நிறைய கடனை வாங்க வேண்டியிருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கையினால் அழிவுகரமான யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்புகள் அதிகரிக்கும். சனி மற்றும் ராகுவின் 7 ஆவது பார்வை கன்னி ராசியில் விழுவதால், இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கையினால் அழிவுகரமான யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தாயுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தாயுடனான உறவு சற்று மோசமாக இருக்கும். உங்கள் தாயாரின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். சனி மற்றும் ராகுவின் 10 ஆவது பார்வை தனுசு ராசியில் விழவுள்ளது. இதனால் பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும். திருமணமானவர்கள் மாமியாருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)