ராகு கேது பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு வாழ்க்கை துணையால் வரவுள்ள சூப்பர் அதிர்ஷ்டம்

14 hours ago
ARTICLE AD BOX

ராகு கேது பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு வாழ்க்கை துணையால் வரவுள்ள சூப்பர் அதிர்ஷ்டம்

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

Rahu ketu peyarchi Simmam Astrology

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.

2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரிவுகள் அதிகம் வந்திருக்கும். தொழில், பணி நிமித்தமாகவோ.. குடும்பத்துக்குள் பிரிவுகள் ஏற்பட்டிருக்கும். ராகு ஏழாம் இடத்தில் அமர்ந்து குரு பார்வை இருப்பதால் அது குடும்ப அன்யோன்யத்தை பெரிதாக பாதிக்காது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரிய பெரிய சங்கங்கள், அமைப்புகளில்.. அதாவது சமூகத்தில் புதிய பொறுப்புகள் வரும்.

ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ராசி மற்றும் லக்னத்தில் கேது வருவதால் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் புதிய உச்சம் தொடுவீர்கள். ஏஜென்ஸி சம்பந்தப்பட்ட தொழில்கள் கைக்கொடுக்கும். தொழிலில் வாழ்க்கை துணையால் நல்ல லாபம் உண்டு. அதனால் தொழிலில் வாழ்க்கை துணை இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.

உத்யோகத்தில் நல்ல மாற்றம் இருக்கும். வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆய்வு தொடர்பான பணிகளில் இருப்போருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு. குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலத்தில் உங்களின் இரண்டாம் குழந்தை பல்வேறு சாதனைகளை படைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: மூத்தவர்களின் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கேதுவால் அடிக்கடி மனக்குழப்பங்கள் வந்து செல்லும். மனதை ஒரு நிலைப்படுத்தி குடும்பத்தை சரியாக பார்த்துக் கொண்டாலே பிரச்னை வராது.

பரிகாரங்கள்: கொடுமுடியில் உள்ள பிரம்மா, சிவன், விஷ்ணு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வரலாம். கருப்பு உளுந்து, கருப்பு கொள்ளு தலா ஒரு கிலோ வாங்கி தானம் செய்வதால் நன்மை கிடைக்கும்.

More From
Prev
Next
English summary
The Rahu Ketu transit of 2025 will take place on May 19. You can learn in detail about the good benefits, remedies, and deities to worship for Simmam(Leo) people during this Rahu Ketu transit in this astrology article.
Read Entire Article