ARTICLE AD BOX
ராகு கேது பெயர்ச்சி: கன்னி ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு..வேற லெவல் அதிர்ஷ்டம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி: கன்னி ராசிக்கு கடந்த கால மனக்கசப்புகள் நீங்க உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் பட்ட வேதனைகள் முழுமையாக நீங்கும். திருமணம் தடை இருந்தவர்களுக்கு அது நீங்கி திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கேது விரய ஸ்தானத்தில் அமர இருப்பதால் பணியிட மாற்றம் இருக்கும். ராகு ஆறாம் இடத்துக்கு வருவதால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் முதன்மையான ரேங்கில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் பொட்டி பாம்பாய் அடங்குவார்கள். கடன் சுமை முழுமையாக விலகும்.
புதிய வீடு கட்டுவது, இருக்கும் வீட்டை புனரமைப்பது போன்ற சுப செலவுகள் இருக்கும். பெரிதாக திட்டமிட்டு அதில் பிரம்மாண்ட வெற்றி பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் நிகழும். அனைத்து காரியத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: பணிச்சுமை அதிகரிக்கும். தூக்கமின்னை ஏற்படும். சிலருக்கு முதுகு வலி ஏற்படும். அதனால் உடற்பயிற்சி செய்வது அவசியம். பெண்களுக்கு கருப்பையில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து செல்லும். காரியங்களில் பொறுமையாக இருந்தால் சாதிக்கலாம்.
பரிகாரங்கள்: மீனாட்சி சுந்தரேஷ்வரரின் திருக்கல்யாணத்தை பார்க்க வேண்டும். ஶ்ரீராம ஜெயம் எழுதுவது.. கேட்பதால் மனதில் அமைதி வந்து பிரச்னைகள் நீங்கும்.
- ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் ராசிக்கு அசுர வளர்ச்சி.. தொட்டதெல்லாம் ஜெயமாகும் யோகம்.. பணம் கொட்டும்
- ராகு கேது பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு லாபமோ லாபம்.. பணத்தை கொட்டிக் கொடுக்கும் ராகு.. ஒரே குஷிதான்
- நகை அடகு வைக்க போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவு
- நல்ல செய்தி வந்தாச்சு! தங்கம் விலை என்னவாகும்? பணம் கொட்ட போகுதாம்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
- இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- கதறும் வால் ஸ்ட்ரீட்! அமெரிக்காவே நடுங்குது! அடுத்து இந்தியா, இங்கிலாந்துதான்! டிரம்ப்பால் வந்த வினை
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் நடக்க போகுது.. உஷார்.. Rich Dad Poor Dad ஆசிரியர் வார்னிங்
- பிறந்தமேனியாக ஜோதிடரை நிற்க வைத்து, பக்கத்தில் நின்ற பெண்.. தங்க நகைகள் வேற.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால்.. பதிவு கட்டணம் குறைக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?