ரஷ்யாவுடன் போரை நிறுத்துவது மிக, மிக தொலைவில் உள்ளது: உக்ரைன் அதிபர் சொல்கிறார்

4 hours ago
ARTICLE AD BOX

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன. இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்று இருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அங்கு அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் வான்சுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியேறி விட்டார். அதை தொடர்ந்து லண்டன் சென்று விட்டு நேற்று உக்ரைன் திரும்பிய அவர் கூறுகையில்,’ அமெரிக்காவுடனான எங்கள் உறவு தொடரும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அந்த உளவு எப்போதாவது நடக்கும் உறவை விட மிக நெருக்கமானது. உக்ரைன் அமெரிக்காவுடன் போதுமான வலுவான கூட்டாண்மையைக் கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன். அதே போல் ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் நடப்பது இன்னும் வெகு வெகு தொலைவில் உள்ளதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.

* டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில்,’ அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நன்றியை உணராத நாள் இல்லை. இது நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு. எங்களுக்குத் தேவை அமைதி, முடிவில்லாத போர் அல்ல. அதனால்தான் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இதற்கு முக்கியம் என்று நாங்கள் கூறுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

The post ரஷ்யாவுடன் போரை நிறுத்துவது மிக, மிக தொலைவில் உள்ளது: உக்ரைன் அதிபர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article