ARTICLE AD BOX
Published : 13 Mar 2025 01:01 AM
Last Updated : 13 Mar 2025 01:01 AM
ரஷ்யாவுடனான போரை நிறுத்த உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான் ’’ என அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்தபோது, ரஷ்யாவுடன் போர் நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதனால் உக்ரைன் குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியது. உக்ரைனுக்கு ஆயுத உதவியை உடனடியாக நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறினார்.
இதையடுத்து சவுதி அரேபியாவில் உக்ரைன் குழுவினருடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியும் சவுதி அரேபியா சென்றிருந்தார். அப்போது அமெரிக்கா தெரிவித்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ‘‘ போர் நிறுத்தம் செய்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி இந்த விஷயத்தை நாங்கள் ரஷ்யாவிடம் கொண்டு செல்வோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் ஒத்துக் கொள்வர் என நம்புகிறோம்’’ என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தொகுதி மறுவரையறையால் பெண்களுக்கு கூடுதலாக 75 பேரவை தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து
- இறை வணக்கம் உருது மொழியில் நடத்தியதாக பிஹார் பள்ளி முதல்வர், ஆசிரியர் இடமாற்றம்
- ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 9 மாநகராட்சிகளில் பாஜக அமோக வெற்றி
- கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 155 பயணிகள் பத்திரமாக மீட்பு: 27 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாகிஸ்தான் ராணுவம்