ARTICLE AD BOX
ரஷ்யா உக்ரைன் போர் பல காலமாக நடந்து வரும் நிலையில் தற்போது போர் நிறுத்த முயற்சிகள் பாஸிட்டிவாக செல்வதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
ரஷ்யா உக்ரைன் போர் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது போர் இடைவெளிவிட்டு மீண்டும் இரண்டு நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலைமை வரும். அந்தவகையில் கடந்த 2022ம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது.
மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன.
இப்படியான நிலையில், உக்ரைன் ஆதரவு நாடான அமெரிக்கா சில நாட்கள் முன்னர் ரஷ்யாவிடம் போர் நிறுத்தம் குறித்து பேசியிருக்கிறது. இதன் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து பின் நேரடியாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் போர் நிறுத்த முயற்சிகளை எடுக்க ரஷ்யா மற்றும் அமேரிக்கா இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேசினர். அப்போது இரு நாட்டு அதிபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் எந்த வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்துவந்த அமெரிக்கா, அதை நிறுத்தியது.
இதனைத்தொடர்ந்து இருநாடுகளும் தாக்குதல் நடத்தின.
நேற்று முன்தினம் புடின் 30 நாட்களுக்கு போரை நிறுத்துவேன் என்று ட்ரம்பிடம் கூறினார். ஆனால், “தனது நாட்டின் அணு அமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது’ என்று உக்ரைன் குற்றம் சாட்டியது.
இதனைத்தொடர்ந்து ஜெலன்ஸ்கியிடம் ட்ரம்ப் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. புடினுடன் நடந்த பேச்சின் விவரங்கள் தொடர்பாக, ஜெலன்ஸ்கியிடம் விளக்கினேன். போர் நிறுத்த முயற்சிகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இரு தரப்புடன் தொடர்ந்து பேசப்படும்’ என்றார்.
போரில் செலவிட்ட தொகையை மக்களின் தேவைக்கு சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்று டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதாகவும் தகவல் வந்திருக்கிறது.