ARTICLE AD BOX
மாஸ்கோ : ரஷியாவில் உளவு பார்த்ததாக பிரிட்டன் தூதரக அதிகாரிகள் இருவரை ரஷியாவிலிருந்து உடனடியாக வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ரஷியாவின் தேசிய பாதுகாப்பு சேவை துறை(எஃப்.எஸ்.பி) கூறியிருப்பதாவது, பிரிட்டன் தூதரக அதிகாரிகளான மேற்கண்ட இருவரும் பொய்யான தகவல்களை அளித்து தங்கள் நாட்டுக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது தற்போது தெரிய வந்ததையடுத்து, அந்த இருவரையும் அடுத்த இரு வாரங்களுக்குள் ரஷியாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்விவகாரத்தில் பிரிட்டன் தூதரகத்திடம் விளக்கம் கேட்டு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தொடர் சண்டையில், உக்ரைனுக்கு பிரிட்டன் பக்கபலமாக துணை நிற்கும் நிலையில், ரஷியாவின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.