ARTICLE AD BOX
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் A1 குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாகேந்திரனின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் எந்த விபரத்தையும் குறிப்பிடவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.