ARTICLE AD BOX
ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! இதுவரை அப்ளை பண்ணாதவங்களுக்கு.. ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்
சென்னை: ரயில்வேயில் தேர்வர்கள் எதிர்பார்த்த ஆர் ஆர் பி குரூப் டி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை அமைப்பாக ரயில்வே உள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்தியன் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். கை நிறைய சம்பளம் + சலுகைகள் இருப்பதால் ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான ஊழியர்களின் கனவாக உள்ளது. ரயில்வே வேலைக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் ரயில்வே வேலையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பல லட்சக்கணக்கான இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்வர்கள் பெரிதும் எதிபார்த்து இருந்த ரயில்வே குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிய இருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப் டி தேர்வு அறிவிப்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம்
பணியிடங்கள் விவரம்:
டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி - 5,058
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) - 799
டிராக் மெயிண்டர்ன் (குரூப் - 4)- 13,187
அஸிஸ்டண்ட (P-Way) - 247
மெக்கானிக்கல் அஸிஸ்டன் (C&W) - 2,587
அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) - 420
அஸிஸ்டண்ட் (ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) - 3077
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி - 1,381
அஸிஸ்டன் லோகோ (எலக்ட்ரிக்கல்) - 950
அஸிஸ்டன் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்) - 744
உள்பட மொத்தம் 32,438 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது தேசிய அப்ரெண்ட்டீஸ் சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை ஜனவரி 1, 2025 தேதிப்படி 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: 4 கட்ட தேர்வு முறைகள் உள்ளன. கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு எழுதிய பிறகு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வு எழுதி பிறகு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
அவகாசம் நீட்டிப்பு: ரயில்வேயில் உள்ள குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட தேதியின் படி விண்ணப்பிக்க வரும் மார்ச் 3, 2025 கடைசி நாளாகும்.
திருத்தம் மேற்கொள்ள: விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 13 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தேவையான சான்றிதழ்களை தயார் செய்து வைத்துக்கொண்டு விண்ணப்பியுங்கள்.
- யூனியன் வங்கியில் 2691 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்! டிகிரி முடிச்சவங்க அசத்துங்க
- எழுத்து தேர்வு கிடையாது.. ஸ்டேட் வங்கியில் 1,194 காலியிடம்.. சென்னை சர்க்கிளிலும் பணி நியமனம்
- டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. பிப்ரவரி 20 - 21 தேதியில் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை
- HCL வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 22ம் தேதி இண்டர்வியூ.. சென்னை அம்பத்தூரில் பணி நியமனம்
- Zoho-வில் "அக்கவுண்ட் மேனேஜர்" வேலை வேண்டுமா? சென்னையிலேயே பணி!
- பழனியாண்டவர் கல்லூரியில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்! செம சான்ஸ்.. அப்ளை பண்ணுங்க
- குரூப்-2ஏ தேர்வில் முதல்வர் குறித்த வினாவுக்கு விடை குறிப்பு வெளியாகவில்லை.. விடையே வராத 5 கேள்விகள்
- சென்னை அமைந்தகரை கோவிலில் வேலை.. மாதம் 42 ஆயிரம் சம்பளம்.. எழுத படிக்க தெரிந்தால் போதும்!
- வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. ஐடி நிறுவனம் சூப்பர் வாய்ப்பு
- தமிழக மருத்துவ வாரியத்தில் வேலை.. 425 பணியிடங்கள்.. 1.30 லட்சம் சம்பளம்! டிப்ளமோ, டிகிரி தகுதி தான்
- கடலை மிட்டாய் தின்றால் ஆபத்து.. பள்ளிகளுக்கான சப்ளையை நிறுத்தும் கர்நாடகா அரசு.. காரணம் இதுதான்
- 100 சதுர அடி கிடைச்சாலும் விடாதீங்க! இனி பஞ்சப்பூருக்கு தான் டிமாண்ட்! ஒட்டுமொத்த கலரும் மாறிடுச்சு!
- அந்தப்புரம் அம்பலம்.. நடிகை ராதாவுக்காக மோதிய 2 ஹீரோ.. பல்லாயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி? நிஜமா
- மகிழ்ச்சியில் நெப்போலியன் குடும்பம்.. மகன், மருமகளுக்கு செம வரவேற்பு.. நெகிழ்ச்சியான பதிவு
- விஜய் வித்யாஸ்ரம்.. நடிகர் விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அண்ணாமலை