“ரயில் மோதி பலியான வாலிபர்”… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… 4 பேர் கைது..!!

9 hours ago
ARTICLE AD BOX

டெல்லி கான்ட் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தற்கொலை செய்து இறந்தவரின் உடலில் பல கத்தி காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 12ஆம் தேதி காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து விசாரித்து வந்தனர். இதைத் தொடர்ந்து இறந்தவரின் போட்டோவை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் பால்ஜித் நகரை சேர்ந்த பங்கஜ் என்பது தெரியவந்தது. இவரை அவருடைய மைத்துனர் நவீன் என்பவர் அடையாளம் காட்டியுள்ளார். அதோடு அவர் கடந்த மார்ச் 8 ம் தேதி காணாமல் போனதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இவர் கூறியதை வைத்து ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது கடந்த 8-ம் தேதி பங்கஜ் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருப்பதும், அவரை ஒரு கும்பல் பின் தொடர்ந்து செல்வதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் உண்மை தெரிய வந்தது.

அதாவது அவர்களுக்கும், பங்கஜுக்கும் தகராறு இருந்ததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து, பின்னர் அந்த கொலையை மறைக்க அவரது உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றதாக கூறினர். மேலும் தற்போது 4 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஐந்தாவது நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Read Entire Article