ARTICLE AD BOX
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் துர்நாற்றம் வீசியதால், பயணிகள் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
நேற்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தபோது, முதல் ஏசி வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
தொடர்ந்து அதிகாரிகள் வந்தபோது, பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெட்டியை மாற்றினால் மட்டுமே ரயில் புறப்பட அனுமதிப்போம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால், 40 நிமிடங்களுக்கு மேல் ரயில் தாமதமானது. மாற்றுப் பெட்டிகளில் பயணிகளை ஏற்றிய பிறகு, ரயில் புறப்பட்டுச் சென்றது.