ரயில் சேவையில் மாற்றம்

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை: பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 16111) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 66045) பிப். 28-ஆம் தேதி முண்டியம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக முண்டியம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 1.47-க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை சென்றடையும்.

அதுபோல், புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் மெமு பயணிகள் ரயில் (எண் 66052) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article