ரயிலில் இருந்து விழுந்த கல்லூரி மாணவன் பலி

19 hours ago
ARTICLE AD BOX

தாம்பரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (20). இவர் மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., கிரிமனாலஜி, 3ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மின்சார ரயில் மூலம் கல்லூரிக்கு செல்லும் விஷ்வா நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக திருமால்பூர் – கடற்கரை செல்லும் விரைவு மின்சார ரயிலில் வந்துள்ளார்.

விரைவு மின்சார ரயில் என்பதால் எப்போதும் அதில் கூட்டம் அதிகளவில் இருக்கும். அப்படி நேற்று ரயிலில் அதிகளவில் கூட்டம் இருந்ததால் விஷ்வா படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரயில் தாம்பரம் அருகே வந்த போது ரயிலில் இருந்து விஷ்வா நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்த தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ரயிலில் இருந்து விழுந்த கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Read Entire Article