ரன்யா ராவ் பற்றி இழிவான கருத்து: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

2 hours ago
ARTICLE AD BOX

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகளுமான ரன்யா ராவ் (33), துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது, பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.

அவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் கர்நாடக அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டி வருகின்றது.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் திங்கள்கிழமை பேசிய பாஜக எம்எல்ஏ பசங்கெளடா பாட்டீல், தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர்களின் முழுப் பட்டியலும் என்னிடம் இருக்கிறது, சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதனை வெளியிடுவேன் என்றார்.

மேலும், ரன்யா ராவ் குறித்து இழிவான கருத்துகளை செய்தியாளர்களின் முன்னிலையில் பேசினார்.

இந்த நிலையில், பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ரன்யா ராவ் சமூகத்தில் மரியாதை மிக்கவர், அவரைப் பற்றி ஆபாசமான கருத்துகள் பேசியதாக பாஜக எம்எல்ஏ மீது அகுலா அனுராதா என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், பசங்கெளடா பாட்டீல் மீது பெங்களூரு ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

Read Entire Article