ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் விளையாடினார். அங்கு அவருக்கு என்ன சம்பளம் வழங்கப்பட்டது? என பார்க்கலாம்.
விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரஞ்சி டிராபி போட்டியில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார்.
தனது சொந்த மைதானமான அருண் ஜேட்லி மைதானத்தில் விராட் கோலி 2012 க்குப் பிறகு முதல் முறையாக ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கினார்.
ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால் விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எமாற்றப்பட்டது. முதல் இன்னிங்ஸில் அவர் 6 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ரஞ்சி போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு இந்த போட்டியில் கிடைத்த சம்பளம் எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.
40க்கும் மேற்பட்ட முதல் தர போட்டிகளில் விளையாடிய வீரருக்கு ஒவ்வொரு போட்டியின் ஒவ்வொரு நாளுக்கும் 60,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
21 முதல் 40 முதல் தர போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியின் ஒவ்வொரு நாளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
20க்கும் குறைவான முதல் தர போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 40,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
விராட் 23 ரஞ்சி போட்டிகள் உட்பட மொத்தம் 140 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே கோலி ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் ஒவ்வொரு நாளும் 60,000 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
டெல்லி-ரயில்வே அணிகளுக்கு இடையிலான போட்டி 3 நாட்களில் முடிவடைந்ததால், விராட் கோலி 1.80 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.