ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணி முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

3 hours ago
ARTICLE AD BOX

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், முன்னாள் சாம்பியன் விதர்பா - கேரளா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்திருந்தது. டேனிஷ் மலேவர் 138 ரன்னுடனும், யாஷ் தாக்குர் 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டேனிஷ் மலேவர் 153 ரன்னில் போல்டு ஆனார். யாஷ் தாக்குர் 25 ரன்னிலும், யாஷ் ரதோட் 3 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். அடுத்து வந்த அக்ஷய் கர்னிவார் (12 ரன்), கேப்டன் அக்ஷய் வாத்கர் (23 ரன்), நாசிகெட் புதே (32) ஆகியோர் நிலைக்கவில்லை.

விதர்பா அணி முதல் இன்னிங்சில் 123.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. கேரளா தரப்பில் நித்தேஷ், ஈடன் ஆப்பிள் டாம் தலா 3 விக்கெட்டும், பாசில் 2 விக்கெட்டும், ஜலஜ் சக்சேனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கேரள அணி 2-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் கேரளா 39 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஆதித்ய சர்வாதே 66 ரன்களுடனும் (120 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சச்சின் பேபி 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


Read Entire Article