ARTICLE AD BOX
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில், நாளை காலை 11 மணிக்கு ‘கூலி’ படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகையின் பெயரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில், அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதில் இருப்பது பூஜா ஹெக்டே தான் என்பதை கண்டுபிடித்து, அதை வைரல் ஆக்கி வருகின்றனர்.
ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகை தமன்னா ஒரு ஐட்டம் டான்ஸ் பாடலுக்கு நடனமாடிய நிலையில், தற்போது ‘கூலி’ படத்திலும் அதே போன்று ஒரு பாடலுக்கு பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் எந்த அளவுக்கு ரசிகர்களை சென்றடையும், படத்தின் வெற்றிக்கு எவ்வளவு உதவும் என்பதை பொறுத்து பார்த்துத் தான் தெரியும்.
‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அனிருத் இசையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Revealing Tomorrow 11 AM!❤️🔥 #Coolie@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/G9BqJcbobF
— Sun Pictures (@sunpictures) February 26, 2025