ARTICLE AD BOX
ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க: காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!
இந்த முறை ஐபிஎல் தொடரில் அணிகளின் கேப்டன்களில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார், லக்னௌ அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலம் தொடர்வார்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜத் படிதார் ஆர்சிபியின் கேப்டனாக நீண்ட காலம் தொடர்வார் என விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: ஐபிஎல் 2025: கேள்விக்குறியாக இருக்கும் ராஜஸ்தான் அணியின் சமநிலை!
இது தொடர்பாக ஆர்சிபி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விராட் கோலி பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரஜத் படிதார் நீண்ட காலம் வழிநடத்தப் போகிறார். அவர் அணியின் கேப்டனாக மிகப் பெரிய வேலையை செய்யப் போகிறார். வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் அவரிடம் இருக்கிறது. ஆர்சிபி அணியில் விளையாடுவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
We’ll all rally behind you in this new chapter of yours as Captain of RCB, Rajat!
You got this! pic.twitter.com/G8J8vLsxlg
18 ஆண்டுகளாக ஆர்சிபிக்காக விளையாடி வருகிறேன். ஆர்சிபிக்காக விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். இந்த முறை ஆர்சிபி அணி மிகவும் சிறப்பாக உள்ளது. அணியில் நிறைய திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தனிப்பட்ட முறையில் மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!
ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரஜத் படிதார் பேசியதாவது: லெஜண்டரி வீரர்களான விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் போன்றோர் ஆர்சிபிக்காக விளையாடியுள்ளனர். அவர்களைப் பார்த்து நான் வளர்ந்தேன். ஆரம்பத்திலிருந்தே ஆர்சிபி அணியை எனக்கு மிகவும் பிடிக்கும். டி20 கிரிக்கெட்டில் மிகப் பெரிய அணிகளில் ஒன்றான ஆர்சிபியை அதன் கேப்டனாக வழிநடத்தவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.