ARTICLE AD BOX

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது தான் இருக்கும், இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி சென்னை வந்தடைந்துள்ளார்.
பொதுவாக ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து பயிற்சி மேற்கொள்வது தான் இவருடைய வழக்கம். ஆனால் இந்த முறை 23 நாட்களுக்கு முன்பாக சென்னை வந்துள்ளார். தோனியின் சென்னை வருகை புகைப்படத்தை சிஎஸ்கே நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் அணிந்து வந்த டி-ஷர்ட்டில் இடம் பெற்றுள்ள ஒன் லாஸ்ட் டைம் வரிகள் பலருடைய கவனத்தை ஈர்துள்ளது. அதாவது morse code முறையில் ஒன் லாஸ்ட் டைம் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்து எம் எஸ் தோனி சென்னை வந்தார். Morse code என்பது புள்ளிகள் மற்றும் கோடுகளை வைத்து தகவல்களை பரிமாறும் ஒரு வழிமுறை ஆகும்.