ரசிகரை அறைந்ததற்கான வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி….பிரபல நடிகர் பேட்டி…!!!

16 hours ago
ARTICLE AD BOX

இந்தி திரைப்படத்தில் 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கோவிந்தா. இவர் 140 இந்தி படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் நகைச்சுவை தொடர்பான பாத்திரங்களும், நடனத்திலும் பிரபலமானவர். இந்த நிலையில் நடிகர் கோவிந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு ” ஹை தோ ஹனி ஹை” என்ற படப்பிடிப்பு தளத்தில் வைத்து சந்தோஷ் என்ற ரசிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதால் அவரை கன்னத்தில் அறைந்ததற்காக, ரசிகர் சந்தோஷ்  நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் 9 வருடங்களளாக நீடித்த நிலையில்,இறுதியில் தனது நண்பர் ஒருவர் ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற முறையில் ஆடியோ ஆதாரம் ஒன்றை பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இதன்முலம் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.புகார் அளித்த ரசிகர் தன்னிடம் சுமார் 3 கோடி வரையில்  நஷ்டஈடு கேட்ட நிலையில்,  இந்த ஆடியோ ஆதாரம்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் என்னை  அந்த வழக்கிலிருந்து  விடுவித்தார்கள் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் போது  என்னை யாரும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும், சிக்க வைக்கவே முயற்சி செய்தனர் எனவும் வேதனை தெரிவித்த நிலையில், இந்த வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்தது, புகார் அளித்தவர் பண இழப்பீடு கூறுவதையும் வாபஸ் பெற்றார் எனவும்  தெரிவித்தார்.

Read Entire Article