யோசிக்காம வாங்குவீங்க.. ரூ.3,950 ரேட் கட்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

11 hours ago
ARTICLE AD BOX

யோசிக்காம வாங்குவீங்க.. ரூ.3,950 ரேட் கட்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Monday, March 17, 2025, 17:15 [IST]

பிரீமியம் வேகன் லெதர் பேனல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 64 எம்பி மெயின் கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் (OPPO F27 Pro Plus) போனுக்கு இப்போது, ரூ.3,950 ரேட் கட் கிடைக்கிறது. மார்கெட் விலையில் இருந்து விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக பட்ஜெட் விலைக்கு ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்களுக்கு நிகரான குவாலிட்டி கொடுக்கும்படி ரெசிஸ்டன்ட் மற்றும் புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஓப்போவில் IP69, IP68 மற்றும் IP66 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL-STD-810H சர்டிபிகேஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) வருகிறது.

யோசிக்காம வாங்குவீங்க.. ரூ.3,950 ரேட் கட்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே!

ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (OPPO F27 Pro Plus Specifications): இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு மட்டுமல்லாமல், ஸ்பிளாஷ் டச் கன்ட்ரோல் (Splash Touch Control) கொண்ட 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட 6என்எம் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 (6nm Octa Core MediaTek Dimensity 7050) சிப்செட் வருகிறது.

மேலும், ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) போன்ற பீச்சர்களை கொடுக்கும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மற்றும் மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பிரீமியம் ரவுண்ட் பம்ப் டிசைனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயர் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை கொடுக்கிறது. வேகன் லெதர் பேனல் இருந்தும் 7.53 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது.

இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் ரூ.2000 விலை குறைப்பு செய்யப்பட்டு கிடைக்கிறது. இந்த விலையில் கூடுதலாக ரூ.1,950 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.3,950 விலை குறைப்பு போக ரூ.24,049 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
21 Percent Discount on OPPO F27 Pro Plus With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Read Entire Article