யார்ரா அந்த பையன்? 900 கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி.. வலை வீசி தேடும் லாட்டரி நிறுவனம்

12 hours ago
ARTICLE AD BOX

யார்ரா அந்த பையன்? 900 கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி.. வலை வீசி தேடும் லாட்டரி நிறுவனம்

London
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனின் யூரோமில்லியன்ஸ் லாட்டரியில் இந்திய மதிப்பில் சுமார் 900 கோடி பரிசு வென்றவரை லாட்டரி நிறுவனம் தேடி வருகிறது. அதிர்ஷ்ட எண் கொண்ட லாட்டரி உங்களிடம் இருக்கிறதா என்று மறுபடியும் ஒருமுறை செக் பண்ணுங்க என லாட்டரியை வாங்கியவர்களை லாட்டரி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்களே அப்படி நமக்கும் ஒருநாள் கடவுள் அதிர்ஷடத்தை அள்ளி கொடுத்து விடுவார்.. தலைவிதியே ஒரே நாளில் மாறிவிடாதா என பகல் கனவு பலரும் கண்டு இருப்பார்கள். அதிலும் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி இருக்கும் இடங்களில், இப்படி பகல் கனவு காணாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.

lottery lottery prize

மேலும் வாங்கிய லாட்டரிக்கு பரிசு அடித்து விடாதா, என லாட்டரி குலுக்கல் நாளையும், பரிசுத்தொகை விழுந்த எண்ணையும் செக் செய்து கொண்டு இருப்பார்கள். உண்மையில் பல லட்சம் பேருக்கு ஒருவருக்கு மட்டுமே லாட்டரியில் பரிசுத்தொகை கிடைக்கும் என்பதால், இதில் நஷ்டம் அடைந்தவர்களே அதிகம். ஆனாலும் லாட்டரிகளை சட்டப்பூரவ்மாக அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்கள் விரும்பி வாங்க்குவதை பார்க்க முடியும். உலகின் பல்வேறு நாடுகளிலும் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி இருக்கிறது.

21 பேர் கோடீஸ்வரர் ஆகப்போறாங்க! படுஜோராக நடக்கும் கேரளா லாட்டரி சேல்ஸ்!எந்த மாவட்டம் டாப் தெரியுமா?
21 பேர் கோடீஸ்வரர் ஆகப்போறாங்க! படுஜோராக நடக்கும் கேரளா லாட்டரி சேல்ஸ்!எந்த மாவட்டம் டாப் தெரியுமா?

இதில் டிக்கெட்டுகளை வாங்கி பரிசுத்தொகை வென்றவர்களின் சுவாரசிய கதைகள் பற்றிய விவரங்கள் அவ்வப்பொது சமூக வலைத்தளங்களில் பரவும்.. குறிப்பாக பிரிட்டனில் உள்ள யூரோமில்லியன்ஸ் லாட்டரியில் பல ஆயிரம் கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், இந்த யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் பரிசு வென்றவர்களை பற்றிய சுவாரசிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, பலரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துவிடும். தற்போதும் அப்படியான ஒரு தகவல்கள்தான் உலா வந்து கொண்டு இருக்கிறது.

கேரள லாட்டரியில் அடித்த யோகம்! கோழிக்கோட்டில் அந்த அதிர்ஷ்டசாலி யார்? முதல் பரிசு நம்பரை பாருங்க
கேரள லாட்டரியில் அடித்த யோகம்! கோழிக்கோட்டில் அந்த அதிர்ஷ்டசாலி யார்? முதல் பரிசு நம்பரை பாருங்க

யூரோமில்லியன்ஸ் லாட்டரியில் £83,474,081.80 பரிசுத்தொகை ஒரே நபருக்கு கிடைத்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 899 கோடிக்கும் மேல் ஆகும். லாட்டரியின் அதிர்ஷ்ட எண்ணை சரியாக பொருத்தி முழு தொகையும் ஒரே நபருக்கு பரிசுத்தொகை கிடைக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையே அதிர்ஷ்ட எண் அறிவிக்கப்பட்ட போதும் கூட இதுவரை வெற்றியாளர் கிடைக்கவில்லை. இதனால் லாட்டரி விளையாடியவர்கள் மீண்டும் ஒரு முறை தங்களிடம் உள்ள டிக்கெட் எண்ணை செக் செய்யுமாறு லாட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது. 899 கோடி ரூபாய் வென்றது யார் என பிரிட்டனில் லாட்டரி விளையாடியவர்கள்.. யார்றா அந்த பையன் என்ற ரேஞ்சுக்கு தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
English summary
The lottery company is searching for the winner of a prize worth around 900 crores in Indian currency in Britain's EuroMillions lottery. The lottery company has advised those who bought the lottery to double-check whether they have the lucky lottery number.
Read Entire Article