யார் சார் நீங்கள் எல்லாம்..? தவெக-வில் இருக்கும் ஸ்லீப்பர்சல்ஸ்… அதிர வைத்த விஜய்..!

1 day ago
ARTICLE AD BOX

மாநில அரசின் மொழி கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு ஒரு வழியில் வலுக்கட்டாயமாக திணித்தால் அதையும் அரசியல் ரீதியாக திணித்தால் என்ன ஆகும்…? என தவெக தலைவர் விஜய் எச்சரித்துள்ளார்.

மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், ”சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் பெரிதாக சாதித்து இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே. அப்படி இருக்கும்போது நமது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். நமது கட்சி ஒன்றும் பண்ணையார்கள் கட்சி கிடையாது.

அந்த காலத்தில் பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள். இப்போது கொஞ்சம் உல்ட்டா. மாறிவிட்டது. பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறி விடுகிறார்கள். மக்களுடைய நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ, வளர்ச்சிகளைப் பற்றியோ,எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணம் பணம் பணம்… இருக்கிறார்கள்.

எந்தெந்த ரூட்டில் எல்லாம்,எந்தெந்த வழிகள் எல்லாம் பணம் சம்பாதிக்கலாம்..? இப்படிப்பட்ட மைண்ட் செட்டில் உள்ள பணையார்கள் எல்லாம் அரசியலை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்.

அதை ஜனநாயக முறைப்படி சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் 2026 தேர்தலை நாம் சந்திக்க போகிறோம். அந்த தேர்தலை சந்திப்பது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். பூத் லெவல் ஏஜென்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் மற்ற பெரிய, பெரிய கட்சிகளுக்குத்தான் அந்த பூத் ஏஜெண்டுகள் ஸ்ட்ராங்காக இருப்பார்கள் என்று சொல்வார்கள். 69 ஆயிரம் பூத் ஏஜெண்டுகள் உள்ளன. எல்லாவற்றிலும் பூத் ஏஜெண்டுகள் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு என்று ஒன்றை நடத்த போகிறோம். அன்னைக்கு தெரியும், தமிழக வெற்றி கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைத்தது அல்ல. அன்னைக்கு தெரியும், தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் முதல் சக்தியாக, முதன்மை சக்தியாக, பவர்ஃபுல்லாக இருக்கிறது என்று அன்னைக்கு தெரியும்.

இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள். மும்மொழி கொள்கை. கல்விக்கான நிதியை வந்து நம்முடைய மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். எல்கேஜி- யுகேஜி பசங்க சண்டை போட்டுக் கொள்வார்களே… அதுபோல் இருக்கிறது. கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. வாங்க வேண்டியது இவர்களுடைய உரிமை. எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது? இவர்கள் இருவரும் அதாவது நம்ம பாசிசமும், நமது பாயசமும்… அரசியல் எனிமியும், கொள்கை எனிமையும்… இரண்டு பேரும் பேசி வைத்துக் கொண்டு செட்டிங் செய்து வைத்துக் கொண்டு மாற்றி, மாற்றி சோசியல் மீடியாவில் ஹேஸ்டேக் போட்டு விளையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது..? அதாவது இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது மாதிரி அடித்துக் கொள்வார்களாம். அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். மக்கள் நம்ப வேண்டுமாம். வாட் ப்ரோ… வெரி ராங் ப்ரோ. இதற்கு மத்தியில் நமது பசங்க உள்ளே புகுந்து விளையாட்டு கட்டிவிட்டு டக்கென்று என்று திரும்பி வந்து விடுகிறார்கள். டிவிகே ஃபார் டிஎன் என்று… யார் சார் நீங்கள் எல்லாம்..? எங்கே சார் இருக்கிறீர்கள்? ஸ்லீப்பர்சல்ஸ் மாதிரி… ஆகையால் இதையெல்லாம் மக்களுக்கு நாமே புரிய வைக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவர்களுக்கே தெரியும் இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று. நம்ம ஊரு சுயமரியாதை ஊர்.

நாம் எல்லோரையும் மதிப்போம். சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டு தரமாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்று கருத்து இல்லை. தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். உனக்கு என்ன மொழி வேணுமோ, எப்போ கற்றுக்கொள்ள வேண்டுமோ, எப்ப தோணுகிறதோ.. அப்போது கற்றுக் கொள்ளலாம். அதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட ஒரு உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராகவோ, மாநில அரசின் மொழி கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு ஒரு வழியில் வலுக்கட்டாயமாக திணித்தால் அதையும் அரசியல் ரீதியாக திணித்தால் என்ன ஆகும்…? என அவர் எச்சரித்துள்ளார்.

 

Read Entire Article