ARTICLE AD BOX
யாரை பார்த்து ஆன்டின்னு சொன்ன.. கோபத்தில் சுளுக்கு எடுத்த புஷ்பா பட நடிகை!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுசுயா பரத்வாஜ், ரங்கஸ்தலம், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொணடாடப்பட்டது., அப்போது நடிகை அனுசுயாவும் பொதுமக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடினார். அப்போது அவரை பார்த்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் அப்செட் ஆனார். இதனால், கடுப்பான அனுசுயா கடும் கோபத்துடன் திட்டி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
39 வயதான அனுசுயா பரத்வாஜ் கல்லூரியில் படிக்கும்போதே சாக்ஷி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். இதைத்தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் சினிமாவில் நுழைந்த அனுசுயா ரங்கஸ்தலம் படத்தில் ராஜ்ஜம் கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்த மெஹா ஹிட் அடைந்த புஷ்பா படத்திலும் வில்லியாக நடித்து கலக்கினார்.

சுட்டி பொண்ணு: அவ்வப்போது, கிளாமரான புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவார். சின்னத்திரையில் தற்போது பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பின்னர் தெலுங்கில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியில் இருந்து தமன்னா விலகிய பிறகு அந்த நிகழ்ச்சியை அனுசுயா தொகுத்து வழங்கினார், அனுசுயா வந்தாலே அந்த நிகழ்ச்சி கலைகட்டும், பாட்டு, டான்ஸ் என எதையும் அசால்ட் பண்ணுவார் அனுசுயா. அவரது வயதிற்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது. அந்தளவிற்கு இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.
சர்ச்சை: தொகுப்பாளினி, நடிகை என பன்முகத்திறமையுடன் இருக்கும் அனுசுயா அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி நெட்டிசன்களுக்கு கன்டன் நடிகையாகவும் மாறிவிடுவார். அண்மையில் படுக்கை அறை விஷயம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது எனக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இருப்பினும் மூன்றாவது குழந்தைக்கு எனது கணவர் ஒத்துழைப்பு தரவில்லை. எப்போதும் வேலை வேலை என்று இருக்கிறார் அது எனக்கு மிகப்பெரிய வருத்தம் தான். ஆனால், வீட்டில் பெண் குழந்தைகள் இருப்பது மிகவும் அற்புதமான விஷயம்.

ஆண் பிள்ளைகள் இருந்தாலும், பெண் குழந்தைகள் இருக்கும்போது வீடு வீடாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழ முடியும். குடும்பத்தில் குழந்தை இல்லாமல் இருப்பது ஒரு வாழ்க்கையா என சமூகவலைதளத்தில் வீடியோவுடன் வெளியிட்டு பேசியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர், மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்து பேசினர். இந்நிலையில் அதேபான்று ரசிகர் ஒருவர் அனுசுயாவிடம் கேட்ட அந்த வார்த்தை தான் அவரை கடுப்பாக்கியுள்ளதாம்.
ரசிகர் சொன்ன வார்த்தை: திரையுலகில் நடிகர்கள் 40 வயதை கடந்தாலும் ஹீரோவாகவே நடிக்கின்றனர். இளம் ஹீரோவாக படம் முழுக்க வந்து செல்கின்றனர். ஆனால், நடிகைகள் அப்படி இல்லை. தன் அழகுக்காகவும், வயதை கடந்தாலும் நடிகைகளிடம் வயதை கேட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும். அனுசுயாவிடம் நடந்ததே வேறு ரசிகராக இருந்தாலும் பப்ளிக் பிளேஸில் இப்படியா கேட்பது என கடிந்து கொண்டனராம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்களுடன் மக்களாக சேர்ந்து அனுசுயா பரத்வாஜ் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் ஆன்டி என அழைத்துள்ளார். இதை கேட்டு கடுப்பான அனுசுயா, துணிச்சல் இருந்தால் மேடைக்கு வா, நான் யார் என்று காட்டுகிறேன். என்னை தூண்டிவிட்டால் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் காட்டுவேன் என கோபமாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.