ARTICLE AD BOX

யாருக்கு யாரும் போட்டியில்லை. படம் பிடித்திருந்தால் யார் நடித்திருந்தாலும் அந்த படம் ஸ்டார் அந்தஸ்து பெற்ற படமாகிறது. அதாவது திரை வரலாற்றுத் தகவல்கள் பார்ப்போம்..
பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்ட நடிகர் தனுஷ். இவரது இயக்கத்தில் ‘இட்லி கடை’ ஷூட் முடிந்து அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ்க்கு ஜோடியாக நித்யா மேனனும், முக்கிய கேரக்டரில் அருண் விஜய்யும் நடித்திருக்கிறார்கள்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெளியாவதால்
அஜித்துக்கு போட்டியாக வருவது தோற்றம் உருவாகி விடும் என்பதால், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ‘லப்பர் பந்து’ பட இயக்குனர் தமிழரசன் இயக்கத்தில் ஒரு படம், ‘போர்த்தொழில்’ பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக என தனுஷின் பணி தொடர்கிறது.
மேலும் சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமும் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தனுஷ் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப் என பாலிவுட் படங்களிலும் நடித்து தனது தடத்தை பதித்திருக்கிறார். தற்போது மீண்டும் ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சனோன் ஜோடியாக இணைந்துள்ளார்.
இந்நிலையில் விஜய் மற்றும் தனுஷ் தொடர்பான வீடியோ ஒன்று டிரெண்டாகி இருக்கிறது. அதாவது தனுஷ் நடித்த படிக்காதவன் படமும், விஜய் நடித்த வில்லு திரைப்படம் ஒரே சமயத்தில் ரிலீஸானது. அந்த சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த விஜய்யிடம் தனுஷ் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர், ‘வணக்கம் தளபதி’ என்று சொல்ல; விஜய்யோ, ‘வணக்கம் தனுஷ் படிக்காதவன் படத்துக்கு வாழ்த்துகள்’ என்று கூறினார்.
உடனே தனுஷோ, ‘ஐயோ அண்ணா உங்களோட வில்லு படம் வருதே. அதை நினைத்து நடுங்கிட்டு இருக்கோம் அண்ணா’ என்று கேஷுவலாக கூறினார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ‘தனுஷ் ஈகோவே இல்லாம பேசிருக்காரே ப்பா’ என்று கமெண்ட்ஸ் செய்து..
அதேபோல ‘இட்லி கடை’ படமும் ரிலீஸ் செய்யலாம். தொழில் தானே. தனுஷ் படத்துக்கு போட்டியாகவா வந்தது பிரதீப் நடித்த ‘டிராகன்’ படம்? இல்லை. ஆனால், திரை ஆர்வலர்களால் டிராகன் படம் வசூலில் சாதனை புரிகிறது.
போட்டியென ஏதும் இல்லை, ஸ்டார் அந்தஸ்தும் மாயை. படம் ரசிக்கப்படணும் அவ்வளவே’ எனவும் நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

The post யாருக்கு யார் போட்டி? யாருக்கு ஸ்டார் அந்தஸ்து?: இணையதள கருத்துகள்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.