ARTICLE AD BOX
யாரு சாமி அவன்.. ரூ.16,740 போதும்.. 24GB ரேம்.. 5640mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் மாடலாக ஓப்போ எப்29 5ஜி (OPPO F29 5G) வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் சீனாவில் அடிமட்ட பட்ஜெட்டில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5640mAh பேட்டரி, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ஏ5 வைட்டாலிட்டி எடிஷன் (OPPO A5 Vitality Edition) களமிறங்கி இருக்கிறது. ஆகவே, இந்த போனின் இந்திய வெர்ஷனுக்கு எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. வெறும் ரூ.14,345 பட்ஜெட்டில் ஆல்-ரவுண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட் மாடலாக களமிறங்கி இருக்கிறது.
மார்ச் 20ஆம் தேதி ஓப்போ எப்29 5ஜி சீரிஸ் வெளியாக இருக்கிறது. இதில் ஓப்போ எப்29 5ஜி போனானாது, ஏற்கனவே சீனாவில் வெளியான ஓப்போ ஏ5 போனின் இந்திய வெர்ஷனாக இருக்கப் போவது உறுதியாகி இருக்கிறது. இந்த நேரத்தில் ஓப்போ ஏ5 போனுடன் வெளியான வைட்டாலிட்டி எடிஷன் போனும் இந்திய வெர்ஷனாக வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

ஓப்போ ஏ5 வைட்டாலிட்டி எடிஷன் அம்சங்கள் (OPPO A5 Vitality Edition Specifications): இந்த ஓப்போ போனில் 360 டிகிரி டிராப் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, பாடியின் 4 கார்னர்கள், 6 எட்ஜ்களில் டிராப் ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். இது கிட்டத்தட்ட மிலிட்டரி கிரேடு ரெசிஸ்டன்ஸ் கொடுப்பதாகும். IP66 + IP68 மற்றும் IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
இந்த டிசைனை போலவே கலர் வேரியண்ட்களும் பிரீமியம் ஃபீல் கொடுக்கும்படி இருக்கிறது. ஏனென்றால், 7.76 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடியில் கிளாசிக் கேமரா மாடியூல் பம்ப் கொண்ட அம்பர் பிளாக் (Amber Black), ஜேட் கிரீன் (Jade Green) மற்றும் அகேட் பிங்க் (Agate Pink) கலர்கள் கிடைக்கின்றன. இதில் ஜேட் கிரீன் கலர் வேரியண்டில் வேகன் லெதர் பேனல் கிடைக்கிறது.
இந்த ஓப்போ ஏ5 வைட்டாலிட்டி எடிஷனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் கேமரா மற்றும் ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த 12 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அடிமட்ட பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம் அவுட்புட் கிடைக்கிறது.
இந்த ஓப்போ போனின் டிஸ்பிளேவில் குளோவ் மோட் (Glove Mode), வெட் & ஆயிலி டச் (Wet & Oily Touch) கொண்ட 6.67 இன்ச் (1604 × 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 45W சார்ஜிங், 5640mAh பேட்டரி மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) உள்ளன.
இந்த ஓப்போ ஏ5 வைட்டாலிட்டி எடிஷனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,345ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,740ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,130ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் இருப்பதால், இந்தியாவிலும் எதிர்பார்ப்பு வந்துள்ளது.