ARTICLE AD BOX
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம் போல் சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கு, ராமதாஸ் என்ற நபர் ஒருவர் வந்துள்ளார்.
இளம்பெண் தனியாக நின்று கொண்டிருப்பதை கவனித்த ராமதாஸ் , அந்தப் பெண்ணை சகோதரி என்று அழைத்து பேசியுள்ளார். மேலும், அங்கு நின்றுகொண்டிருந்த பேருந்தில் ஏறுவதற்காக தனக்கு உதவி செய்யுமாறு ராம்தாஸ் அந்த இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண்ணும், அவருக்கு உதவி செய்யும்படி அவருக்கு அங்கு சென்றுள்ளார்.
அவர் பேருந்திற்குள் நுழைந்ததும், ராம்தாஸ் பேருந்து கதவை பூட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அவர் தனது தோழி பயணித்த இரண்டாவது பேருந்தில் ஏறி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தோழி, இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த பேருந்து நிலையம் காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் ராம்தாஸ் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
The post “யாராவது காப்பாத்துங்க” கதறிய இளம்பெண்; பேருந்தில் நடந்த கொடூர சம்பவம். appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.