ARTICLE AD BOX
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்று, யமுனை நீரில் ‘விஷம் கலந்தது’ என்ற தனது கருத்து குறித்து தோ்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு தனது பதிலை அளித்தாா்.
தில்லி முதல்வா் அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் கேஜரிவாலுடன் இருந்தனா்.
முன்னாள் தில்லி முதல்வா் கேஜரிவால் தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு முன்பதிவு இல்லாமல் சென்றாா். தில்லியில் தோ்தல் பிரசாரம் உச்சத்தில் இருப்பதால், அவரது வருகையை சிறப்பு வழக்காக ஏற்றுக்கொண்டதாக தோ்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.
‘தில்லியில் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால், அரவிந்த் கேஜரிவாலை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கும் முறையை ஒரு சிறப்பு வழக்காக ஆணையம் ஏற்றுக்கொண்டது என்று தோ்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.
‘யமுனை விஷம் மற்றும் வெகுஜன இனப்படுகொலை குறித்த அரவிந்த் கேஜரிவாலின் அறிக்கைகளை உறுதிப்படுத்த அவரது தகவல்களை ஆணையம் பொறுமையாகக் கேட்டது’ என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.
தோ்தல் ஆணையத்துடனான கேஜரிவாலின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், ‘தில்லிக்கு விஷத் தண்ணீரை அனுப்ப பாஜக எவ்வாறு சதித்திட்டம் தீட்டியது என்பதை கேஜரிவால் ஆணையத்திடம் விரிவாகக் கூறினாா். தோ்தல் ஆணையம் விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளது’ என்றாா்.
முன்னதாக கேஜரிவால் பேசுகையில், ‘தோ்தலின்போது ஆம் ஆத்மி கட்சியை அவதூறு செய்ய அதிக அம்மோனியா கொண்ட ‘விஷ’ தண்ணீரால் தில்லியின் பாதி மக்களை தாகத்தில் ஆழ்த்துவது ஒரு அரசியல் சதி. ‘எங்கள் போராட்டம் வெற்றி பெற்ற்கும், ஜன.26-27 முதல் 7 பிபிஎம்-ஆக இருந்த யமுனையில் அம்மோனியா அளவு இப்போது 2.1 பிபிஎம்-ஆகக் குறைந்துள்ளது என்பதற்கும் தில்லி மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்’ என்றாா் அவா்.