ARTICLE AD BOX
பல சீரியல்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சத்யா ராஜா. சமீபத்தில் போட்டோ ஷூட் வெளியிட்டு மனைவியின் கர்ப்பத்தை இவர் அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளித்திரை பிரபலங்களை விட, சின்னத்திரை பிரபலங்கள் பற்றி ஏதாவது சின்ன செய்தி வெளியானால் கூட அது வைரலாகி விடுகிறது. காரணம், வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறிவிட்டார்கள்.

தினம் தோறும் சீரியலை பார்க்கும் இல்லத்தரசிகள் பலர், டிவியில் வரும் சீரியல் பிரபலங்களை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக வில்லன் - வில்லி சீரியலில் செய்யும் சூழ்ச்சிகளை நிஜம் என நினைத்து, அவர்களை திட்டி கொண்டே சீரியல் பார்க்கும் பல பிரபலங்கள் உள்ளனர்.

அதே போல் என்ன வேலை இருந்தாலும், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விட்டு சீரியல் பார்க்க டிவி முன் ஆஜர் ஆகும் பலர் உள்ளனர். இது சீரியலுக்கே உள்ள தனி சக்தி எனலாம்.

இதன் காரணமாகவே சீரியல் பிரபலங்கள் பற்றிய எந்த விஷயம் ஆனாலும் அது அதிகம் கவனிக்கப்படுகிறது. கடந்த மாதம் மௌனம் பேசியதே, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற பல சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமான சத்யா ராஜா, தன்னுடைய மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார்.

அதே போல், பாக்சிங் உடையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட் புகைப்படமும் வைரலானது. தற்போது தன்னுடைய 3-ஆவது குழந்தைக்கு தந்தையாகி விட்டதாகவும், தனக்கு மகன் பிறந்துள்ளதாகவும், இவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.