மோடிதான் ஏ-1 குற்றவாளி… அதிர வைக்கும் காரணங்களை அடுக்கிய அமைச்சர் ரகுபதி..!

3 hours ago
ARTICLE AD BOX

பிரதமர் மோடியை ஏ-1 குற்றவாளி என சொன்னால் அண்ணாமலை எற்றுக் கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இன்று காலை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு கிடைக்காத நிலையில், தமிழக பாஜக தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை, மு.க.ஸ்டாலின் பற்றி தவறாகப் பேசுகிறார். அவரை ஏ-1 குற்றவாளி என்று கூறி இருக்கிறார். முழுக்க முழுக்க இது ஒரு சட்டத்திற்கு புறம்பான பேச்சு. ஏன் என்றால் பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களிடம் பாஜகவில் இணைந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைக்கிறோம் என்று பாஜக பேரம் பேசியது. ஆம் ஆத்மி கட்சியினுடைய டெல்லி முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிடம் பேரம் பேசப்பட்டுள்ளது.

அவர் சேர மறுத்துவிட்டார். நீங்கள் ஏன் பாஜகவில் இணைய கூடாது என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டது என்று நீதிமன்றத்திலேயே அவரது வழக்கறிஞர் கபில் சிபில் அதிர்ச்சி தகவலைச் சொன்னார். அதேபோல அமலாக்கத் துறை அதிகாரிகள் மிரட்டலால் சிலர் பாஜகவில் இணைந்தனர். அவர்களெல்லாம் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்கள் ஆகிவிட்டார்களா? அல்லது அவர்களை காப்பாற்றியவர் முதல் குற்றவாளியாக கருதப்படுவாரா? என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தாக வேண்டும்.

"பா.ஜ.க.வை அ.தி.மு.க. பாதுகாக்கிறது"- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

அதானியின் செல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதில் 20 ஆயிரம் கோடி யாருக்கு சொந்தமானது? அந்த பணம் எங்கிருந்து வந்தது? அதில் ஏன் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை? பாஜக பிரதமராக இருக்கக்கூடிய மோடி அமலாக்கத்துறையிடம் சொல்லி, அதானி மீது நடவடிக்கை எடுப்பாரா? இன்னும் சொல்லப்போனால் கர்நாடகாவில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மையினுடைய ஆட்சியிலே 40 சதவீதம் கமிஷன் அரசியல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டவிரோத பண பரிமாற்றம் என்று சொல்லி மோடியின் அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? இதற்கு எல்லாம் காரணம் பிரதமர் என்ற அடிப்படையிலே மோடியை நாங்கள் ஏ- ஒன் குற்றவாளை என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read Entire Article