ARTICLE AD BOX
சென்னை: மலையாளத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் இயக்கி மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘லூசிபர்’. பிருத்விராஜ் இயக்கத்தில் உருவான முதல் படம் இது. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தை இயக்கி வருகிறார் பிருத்விராஜ். லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்து தீபக் தேவ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது. அரசியல் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழு சில காட்சிகளை நீக்கவும், சில காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், தேசிய கொடி சம்பந்தப்பட்ட காட்சியில் வரும் வசங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒரு சண்டை காட்சியில் பெண் ஒருவரின் தலையை பலமுறை சுவற்றில் மோதி உயிரிழக்கச் செய்யும் காட்சியின் நீளத்தை குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.