சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சியில் அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. முதலாவதாக அப்போது சேலம் மாநகராட்சி திமுகவைச் சேர்ந்த 43-வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் பேசுகையில், சேலம் மாநகராட்சி 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள் முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சியில் எந்த ஒரு பணியும் முறையாக மேற்கொள்வதில்லை. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் யாரிடம் கேட்டாலும் சரிவர பதில் அளிப்பதில்லை என குற்றம்சாட்டினர். ஒப்பந்ததாரர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் பணி செய்வதற்காக ஒப்பந்தம் எடுத்துவிட்டால் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும், ஆனால் அதுபோன்ற நிலையில்லை எனக் கூறி தொடர் குற்றச்சாட்டை வைத்து மைக்கை தூக்கி கீழே போட்டுவிட்டு, சேலம் மாநகராட்சி மேயர் இருக்கைக்கு முன்வந்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மற்றொரு திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம் கூறுகையில், மண்டல அலுவலகங்களில் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்றும், கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டு அலைகழிப்பதாக குற்றம்சாட்டினர்.

இதைத்தொடர்ந்து மற்றொரு திமுக கவுன்சிலர் கலையமுதன் கூறுகையில், மாநகராட்சி முறையாக சரிவர செயல்படவில்லை. குறிப்பாக பள்ளப்பட்டி ஏரி பகுதியில் சீரமைப்பு பணிகள் முடியாமல் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அதிகாரிகள் யாரும் சரிவர வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர்கள் அடுத்தடுத்து மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் சரிவர செயல்படுவதில்லை எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் பேசுகையில், சேலம் மாநகராட்சியில் வரி உயர்வு அதிகரித்து விட்டதாகவும், பாதாள சாக்கடை திட்டங்கள் முறையாக செயல்படவில்லை என்பதை கண்டித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மேலும் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி குறித்து கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக கூறிய நிலையில், ஐந்துக்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலரை சுற்றி வளைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி, அதிமுக கவுன்சிலர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிக்கொண்டு வெளியிடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், மாநகராட்சியில் வரி திணிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது சேலம் மாநகராட்சி அதிக வரியை திணித்து வருகிறது. இதனை எதிர்த்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.