மோடி அரசு ஊழல் அரசா? கோவை பாஜகவினரின் கோஷத்தை பாருங்க.. பாவம் அவங்களே குழம்பிட்டாங்க

8 hours ago
ARTICLE AD BOX

மோடி அரசு ஊழல் அரசா? கோவை பாஜகவினரின் கோஷத்தை பாருங்க.. பாவம் அவங்களே குழம்பிட்டாங்க

Chennai
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். அண்ணாமலையை கைதை கண்டித்து அவரை விடுதலை செய்யக்கோரியும் கோவை மாவட்டம் பல்லடத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மோடியின் அரசை ஊழல் அரசு என்றும், அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் கோஷமிட்ட வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

annamalai bjp coimbatore

அதேபோல் வீட்டில் இருந்து காரில் போராட்டத்துக்கு வந்த அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். இதேபோல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் அண்ணாமலை கைதை கண்டித்து கோவை மாவட்டம் பல்லடத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கைதான அண்ணாமலையை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ‛‛ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம்.. பாஜகவின் ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. விடுதலை செய்.. விடுதலை செய்.. மாநில தலைவரை விடுதலை செய்'' என்று தொடர்ந்து கோஷமிட்டனர்.

மிசாவில் சிறை போனவர் ஸ்டாலின்.. உனக்கு 5 மணிநேர காவலில் இருக்க முடியாதா? அண்ணாமலையை சாடிய சேகர்பாபு
மிசாவில் சிறை போனவர் ஸ்டாலின்.. உனக்கு 5 மணிநேர காவலில் இருக்க முடியாதா? அண்ணாமலையை சாடிய சேகர்பாபு

அப்போது திடீரென்று, ‛‛ஆர்ப்பாட்டம்.. இது ஆர்ப்பாட்டம்... மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்'' என்று ஒருவர் கூற அதனை பின்தொடர்ந்து பிற பாஜகவினரும் தெரிவித்தனர். அண்ணாமலை கைது நடவடிக்கையை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் பாஜகவினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடியின் அரசை ஊழல் அரசு என்றும், அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பாஜகவினர் கோஷமிட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
English summary
BJP members protested yesterday over the TASMAC scam. BJP state president Annamalai was arrested at that time. BJP members protested in Palladam, Coimbatore district, condemning the arrest of Annamalai and demanding his release. At that time, a video of them chanting slogans calling the Modi government a corrupt government and protesting against it has been released and is going viral.
Read Entire Article