மேலும் ஓா் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு

2 hours ago
ARTICLE AD BOX

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீது ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு தொடா்ந்திருந்த மேலும் ஒரு வழக்கிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தியது. இதில் பலா் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக, அப்போதைய ஷேக் ஹசீனா அரசு கலீதா உள்பட 32 போ் மீது வழக்கு தொடா்ந்திருந்தது. அந்த வழக்கிலிருந்து கலீதா ஜியாவை கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கமீலா அஃப்ரோஸா புதன்கிழமை விடுவித்தாா். அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் கலீதாவின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளதால் வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, மாணவா் போராட்டம் காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது சிறைவைக்கப்பட்டிருந்த கலீதா ஜியாவை விடுதலை செய்ததது. தற்போது அவா் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டுவருகின்றன.

Read Entire Article