மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து 3 இ-ரிக்‌ஷாக்கள் மீது மோதிய கார்: 7 பேர் பலி

2 hours ago
ARTICLE AD BOX

மேற்கு வங்கத்தில் வேகமாக வந்த கார் அடுத்தடுத்து 3 இ-ரிக்‌ஷாக்கள் மீது மோதியதில் 7 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் வேகமாக வந்த கார் மூன்று இ-ரிக்‌ஷாக்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக வெள்ளிக்கிழமை மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் பலியானார்கள்.

எட்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், எதிர் பக்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு எஸ்யூவி கார் மூன்று இ-ரிக்‌ஷாக்கள் மீது அடுத்தடுத்து மோதியதில், மின்சார வாகனங்களில் இருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Read Entire Article