ARTICLE AD BOX

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் பரபரப்பாக சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதுதான் கூலி படத்தில் நடித்து முடித்தார். முடித்த கையோடு ரெஸ்டே எடுக்காமல் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தைப் பற்றிய அப்டேட்டுகளை பிரபல பத்திரிகையாளர் சபையர் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
சாதாரணமாவே எல்லா படங்களும் 100 நாள்ல எடுக்குறாங்க.சூப்பர்ஸ்டார் வச்சி, பெரிய நடிகர்களை எல்லாம் வச்சி 150 நாள்ல படம் எடுத்துருக்காங்கன்னா பெரிய விஷயம். பைட், சாங் எல்லாம் எடுத்துட்டாரு. படம் பெரிய தொகைக்கு ஓடிடியில பிசினஸ் ஆகியிருக்கு. ரொம்ப நாளா ஓடிடி பிசினஸ் பாதாளத்துல இருந்தது. இந்தப் படம்தான் தூக்கி நிறுத்திருக்கு. இந்தப் படத்துல யாருக்குமே மேக்கப் போடலை. ஒரிஜினல் முகம்தான். ரஜினிகாந்துக்குன்னு அனிருத் தனியா கீ போர்டு வச்சிருக்காரு. அதுலதான் மியூசிக் மேஜிக் பண்ணுவாரு. ஒரு சாங் சிங்கிள் ஒண்ணு பார்த்துப் பார்த்து செஞ்சிக்கிட்டு இருக்காரு. அது வெளியே வரும்போது பெரிய வைரலாகுமாம்.

logesh
இந்தப் படம் மே மாதத்துல இருந்து அப்படி தள்ளி தள்ளி தீபாவளிக்குப் போகும். போஸ்ட் புரொடக்ஷனுக்கே எப்படியும் 2 மாசம் வேலை நடக்கும். ஜெயிலர் 2 பொங்கலுக்கு வர வாய்ப்பு இருக்கு. கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் ரஜினி ரசிகர்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அத்தனை விஷயங்களையும் வைத்திருப்பார். ஏற்கனவே கமல் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி விக்ரம் படத்தை எடுத்து ஹிட் கொடுத்தவர்.
அதனால் அவருக்கு நிச்சயம் அந்த வித்தை தெரியும். அதுவும் இளம் இயக்குனர் என்பதால் இப்போதுள்ள 2கே கிட்ஸ்களுக்குப் பிடிக்கிற மாதிரி நிறைய விஷயங்களைச் சேர்த்திருப்பார். படத்தில் அமீர்கான், சத்யராஜ், சுருதிஹாசன், உபேந்திரா என பெரிய பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை எல்லாம் வைத்து படத்தை 150 நாளில் முடித்துள்ளார் என்றால் அது சாதாரணமான விஷயமல்ல. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வரும். அது ரசிகர்களைக் கொண்டாடச் செய்யும் என்கிறார் பத்திரிகையாளர் சபையர்.