மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

2 hours ago
ARTICLE AD BOX
England players get emotional

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில்  இங்கிலாந்து அணி 2 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் வெளியேறியது.

தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு முன், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் போட்டியிட்டது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தும், ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. அந்த தோல்வியை தொடர்ந்து நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதிய நிலையில், வெற்றிக்கு நெருங்கி வந்து தோல்வி அடைந்தது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடிய நிலையில் கடைசி வரை போராடி இறுதியாக 49.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த தோல்வி இங்கிலாந்தின் பல வீரர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது என்று சொல்லலாம். இந்த தோல்வியின் மூலம் CT-தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள், குறிப்பாக ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர், மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். ஜோப்ரா ஆர்ச்சருடைய கண்ணில் கண்ணீரும் வந்தது.

போட்டி முடிந்த பிறகு வேதனையுடன் பேசிய பட்லர் ” நாங்கள் பந்து வீசும் போது, கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தோம். அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிமுக்கு என்னுடைய பாராட்டுக்கள். அவர் அற்புதமான இன்னிங்ஸை ஆடி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். இருப்பினும் போராடியும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது” எனவும் பேசினார்.

Read Entire Article