மூன்று மாதங்களுக்கு பிறகு நாகை- இலங்கைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கியது

3 days ago
ARTICLE AD BOX

நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் போக்குவரத்து ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்னைகள் நீடித்து வந்ததால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நாகை மற்றும் இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து பிப். 22ம் தேதி (நேற்று) மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாகை துறைமுகத்தில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை நேற்று தொடங்கியது.

காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்திலிருந்து சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல், 83 பயணிகளுடன் காங்கேசன்துறைக்கு புறப்பட்டு சென்றது. பகல் 12 மணிக்கு இலங்கையை அடையும் கப்பல், மீண்டும் அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகைக்கு வரும். நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மூன்று மாதங்களுக்கு பிறகு நாகை- இலங்கைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article