முள்ளும் மலரும் கிளைமாக்ஸில் இளையராஜா செய்த மேஜிக்... அட ஒரு கேரக்டராவே மாறிடுச்சே!

4 hours ago
ARTICLE AD BOX

ரஜினிகாந்துக்கு பெரிய அளவு பேரு கொடுத்த படம். அவர் நடிப்புக்குத் தீனி போட்ட படம். அதன்பிறகு முழுமையான கதாநாயகனாக உயர்ந்தார். இப்ப கூட ரஜினிகாந்த் எனக்கு இந்தமாதிரி ஒரு படம் கிடைச்சா என் வாழ்நாள் பாக்கியம்னு சொல்ற அளவு இந்தப் படம் வந்துருக்கு.

படம் வெற்றி: தமிழ்சினிமா வரலாற்றில் முக்கியமான படம். இதுக்கு முன்பு வசனங்களால்தான் படம் வெற்றி பெறும். இது காட்சிகளால் வெற்றி பெற்றது. இசையில் ஒரு பக்கம் மவுனத்தையும், இன்னொரு பக்கம் இசை ராஜ்யத்தையும் பண்ணி இருப்பார் இளையராஜா. இயக்குனர் மகேந்திரனுக்கும் பெரிய அளவில் பேரு கொடுத்தது. பின்னணி இசையில் பின்னி இருப்பார் இளையராஜா.

கிளைமாக்ஸ் காட்சி: குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இளையராஜா நடித்து இருப்பார் என்றே சொல்லலாம். தங்கச்சி ஷோபாவை எங்கேன்னு வீட்டில் வந்து தேடுகிறார். அங்கு யாரையுமே காணவில்லை. ஒரே ஒருவர் மட்டும் 'உன் தங்கச்சிக்கும், இன்ஜினீயருக்கும் மலைக்கோவில்ல கல்யாணம் நடக்குது. எல்லாரும் அங்கே தான் போயிருக்காங்க. நீ முடிஞ்சா போயி ஆசிர்வாதம் பண்ணிட்டு வா'ன்னு சொல்றாரு.


இளையராஜாவின் இசை: அங்கு போனதும் ரஜினியின் மனைவி படாபட் ஜெயலட்சுமியும் கல்யாணத்துக்கு ஆதரவு கொடுக்கிறார். ஆனால் ரஜினிக்கு மட்டும் மாப்பிள்ளை (சரத்பாபு) பிடிக்கவில்லை. அதனால் தங்கச்சியிடம் 'உனக்கு அண்ணன் வேணுமா, மாப்பிள்ளை வேணுமா'ன்னு கேட்கிறார். அப்போது அவரது தங்கையின் மனம் பிறழ்கிறது. அப்போது இளையராஜாவின் இசை தான் அங்கு நடிக்கிறது.

மனப்பிறழ்வு: அந்த மனப்பிறழ்வை பறையின் இசையில் மெதுவாகக் கொண்டு வந்து மனம் மாறி அண்ணனிடம் செல்லும்போது பறையின் இசை வேகம் எடுக்கிறது. அதற்கேற்ப ஓட்டம்பிடித்து அண்ணனை நோக்கி வருகிறாள். வந்ததும் தங்கச்சி தன் பேச்சைக் கேட்டுவிட்டாள்.'இப்ப சொல்றேன்னு ரஜினி என் தங்கச்சிக்கும், அந்த இன்ஜினீயர் மாப்பிள்ளைக்கும் கல்யாணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறேன்'னு சொல்றாரு.

படம் பக்காவாக முடிகிறது. இந்த கிளைமாக்ஸில் இளையராஜாவின் இசை அந்த அளவு அற்புதமாக எடுபட்டுள்ளது. அதனால் தான் நடித்திருப்பதாகச் சொன்னேன் என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

Read Entire Article