ARTICLE AD BOX
சென்னை,
புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்ற மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்துள்ளன.
இந்தநிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
மன வேதனை அடைகிறேன்.... மும்மொழி கொள்கையை பற்றி.. கேட்டு வரும் விவாதங்களில் சில கருத்துக்கள் என்னை கவலை அடையச் செய்கின்றது.. பிரதானமாக.. மூன்றாவது மொழி வேண்டாம் என்று. விவாதிப்பவர்கள்.. அரசியல்வாதி மட்டுமல்ல.. சில கல்வியாளர்கள் என்று சொல்பவர்கள் கூட.. அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு... அவர்களுக்கு எந்த பின் புலமும் இல்லாமல்.. இரண்டு மொழி சொல்லிக் கொடுப்பதே பெரிய சேவை போலவும்... அவர்களுக்கு வீட்டில்.. சொல்லிக் கொடுப்பதற்கு.. படித்த தாய் தந்தையர் இல்லை என்பதனால்.. அவர்களுக்கு டியூசன் போன்ற வசதிகள் செய்து கொள்ள முடியாததால்.. அவர்களுக்கு இதுவே போதும் என்று வாதிடுகிறார்கள்... ஆக வறுமையில்.. வாடும் குழந்தைகளுக்கு.. இப்போது சொல்லிக் கொடுப்பதே.. ஏதோ அதுவே பெரிய சாதனை.. அதற்கு மேல். அவர்கள் ஆசைப்படக்கூடாது.. என்ற தொனியில்.. பலர் பேசி வருகிறார்கள்... சமச்சீர் கல்வியை கொடுக்கிறேன் என்று.. வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி.. வசதி இல்லாதவர்களுக்கு ஒரு கல்விஎன்று.. தமிழக மாணவர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.. பல ரூபாய் பணம் கட்டி.. தனியார் பள்ளிகளில்.. படிப்பதை.. அரசாங்க பள்ளி குழந்தைகளுக்கும் கொடுக்கிறேன் என்றால்... இதுவே அவர்களுக்கு போதும்.. இதற்கு மேல் அவர்களுக்கு எதற்கு.. என்ற என்ற தோனியே.. அரசாங்கத்திடமும் விவாதிப்பவர்களிடமும் இருக்கிறது... புதிய கல்விக் கொள்கை.. மொழியை மட்டும் முன்னிறுத்தவில்லை.. விரிவு படுத்தப்பட்ட கல்வி.. உயர் தொழில்நுட்ப கற்றல்.. சவால்களை சமாளிக்கும் பேராற்றல்.. மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப.. ஏழைக் குழந்தைகளுக்கும்.. அதே விரிவு படுத்தப்பட்ட கல்வி முறை கிடைக்க வேண்டும்.. என்ற நல்லெண்ணத்தில் கொண்டுவரப்பட்டது... ஆனால் அதையெல்லாம் மறைக்கப்பட்டு.. இது ஏதோ இந்தி திணிப்பு என்ற மாயத் தோற்றத்தை.. திராவிட மாடல் அரசு.. அதற்கு ஆதரவாக பேசுபவர்கள்.. ஏற்படுத்துகிறார்கள்... எனக்கு எப்பவுமே.. மிகுந்த உற்சாகத்தோடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மீது ஒரு ஈடுபாடு உண்டு.. எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல்.. பின் பலமும் இல்லாமல்.. படிப்பில் அவர்கள் காட்டும் ஆர்வம்.. என்னை வியக்க வைத்திருக்கிறது.. அதனால்தான் தெலுங்கானா ஆளுநராக இருந்தபோது.. பக்கத்தில் அரசாங்க ராஜ்பவன் பள்ளி.. இருந்தது.. அந்தப் பள்ளிக்கு அடிக்கடி செல்வேன்.. ஆளுநரின் பொது நிதியிலிருந்து.. அந்தப் பள்ளியை மேம்படுத்துவதற்கு.. கம்ப்யூட்டர் போன்ற. உபகரணங்களை அளித்தேன்.அந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள். அன்றாட வேலை செய்பவர்களின் குழந்தைகள் அதனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலேயே.. நான் வணங்கும்.. சத்ய சாய் பாபாவின் அறக்கட்டளை நடத்திய உணவகம் மூலமாக. காலை உணவிற்கு ஏற்பாடு செய்தேன்... இது அங்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது... அந்த அரசாங்க பள்ளியில்.. மாணவர் சேர்க்கைக்கு. அந்த ஆண்டிலிருந்து.. அதிக ஈர்ப்பு இருந்தது... அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக. அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது.. அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதற்கும்.. காலை உணவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த.. ரொட்டி பால்.. கொடுப்பதற்கும்.. மதிய உணவையும்.. ஏற்பாடு செய்வதற்கு உறுதுணையாக இருந்தேன்... சுமார் 75.. அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று.. அவர்களோடு உரையாடி.. அவர்களின் திறமையை கண்டு வியந்து.. மாலை நேரங்களில்.. அரசாங்க பள்ளி மாணவர்களை ராஜ் நிவாஸிற்கு அழைத்து.. அரசு பள்ளி மாணவர்களின்.. திறமை கண்டறியும் (Talent.hunt) நிகழ்ச்சியை நடத்தி.. பல மாணவ மாணவிகளின் அபரி தமான திறமையை கண்டு.. ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல்.. அவர்களுக்கு பல வாய்ப்புகள்.. கிடைப்பதற்கு முயற்சி செய்தேன்... அதேபோல.. அனைவருக்கும் சமமான கல்வி என்ற வகையில்.. முதல்-மந்திரி, கல்வி அமைச்சரோடு இணைந்து.. அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ.. பாடத்திட்டத்தை இன்றைய மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களின் ஒத்துழைப்போடு.. கொண்டு வந்தோம்.. அரசு பள்ளி.. மாணவர்கள் மேஜையில்.. அந்தப் பாடத்திட்டத்தின்.. புத்தகங்கள் அலங்கரிப்பதை பார்த்து.அகமகிழ்ந்து போனேன் அதே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக.. மாலைநேரத்தில்.. சிறுதானிய. சிற்றுண்டி.. வழங்க.ஆலோசனைக் கூறி..முதல்-மந்திரியும் கல்வி அமைச்சரும் அதை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தினோம்.. மத்திய அரசின் கல்வித் திட்டத்தில் இணைந்து அரசாங்க பள்ளிகளில்(smart class rooms)ஸ்மார்ட் வகுப்பு அறை ஏற்பாடு செய்தோம். ஒரு பள்ளி கட்டிட வசதிக்காக அரை நாள் பள்ளி என்று அறிவித்ததை மகிழாமல் முழு நேர பள்ளிக்காக போராடிய அரசு பள்ளி மாணவி மாணவிகளின் ஆர்வத்தை வியந்து.. பாராட்டினேன் பணிவன்புடன் கேட்கிறேன். இந்த குழந்தைகளின் வாய்ப்பை பறிக்காதீர்கள் அவர்களும் உயரட்டும் என பதிவிட்டுள்ளார்.