ARTICLE AD BOX
நீண்ட போராட்டத்துக்குப் பிறகும் இரண்டு மொழி கொள்கை தான் என்று முடிவு செய்த பின்னம் இன்னொரு மொழியை கொண்டு வந்து திணிக்கும் மத்திய அரசு, அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரியில், தலைமை பொறுப்பில் உள்ள பெண்களின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்தான தேசிய மாநாட்டு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஸ்டெல்லா மேரி தலைமையில் நடத்தப்பட்ட இந்த தேசிய மாநாட்டு நிகழ்வில் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் தமிழ்நாட்டு மக்களின் கருத்துகளை மதிக்காமல் முன்மொழிக் கொள்கையை கொண்டு வந்து திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மீண்டும் மீண்டும் இந்திய திணிக்கவில்லை என்று கூறி விட்டு, குழந்தைகள் முன்மொழிக் கொள்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என கனிமொழி தெரிவித்தார்.
ஆங்கிலம், வெளி உலகத்தில் இருக்கக்கூடியவர்களிடம் செய்தி பரிமாறிக் கொள்வதற்காக பயில வேண்டிய ஒரு மொழி என்றும் தாய் மொழி தமிழ், என்பது நாம் யார் என்பதற்கான அடையாளம் என்றும் அவர் கூறினார். இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களே முடிவு செய்ய வேண்டும் என கனிமொழி குறிப்பிட்டார். ஒரு மாநிலம் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இரண்டு மொழி கொள்கை என்று முடிவு செய்த பின்னர், இன்னொரு மொழியை கட்டாயப்படுத்துவதும் ஹிந்தியை திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது, என அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த சில நலத்திட்டங்களை தமிழகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், மும்மொழி கொள்கையை கட்டாயமாக்க முயல்வதால் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினார். மறைந்த ஜெயலலிதாவுக்கு பின் ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி, அம்மா மருந்தகத்தை தொடர்ந்து சரியாக செயல்பட வைத்திருந்தால், மறுபடியும் ஒன்றை கொண்டு வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது என கனிமொழி விளக்கினார்.
“இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” – முதல்வர் மு.க.ஸ்டாலின்