முன்னாள் மனைவிகள் மீது போலீசில் நடிகர் பாலா புகார்

11 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழில் 'அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழைவிட மலையாள திரையுலகில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார்.

இது இவரது நான்காவது திருமணமாகும். இதற்கு முன்பு மூன்று திருமணங்கள் செய்து அவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் பாலா. இந்நிலையில், பாலா தனது மனைவி கோகிலாவுடன், கொச்சியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர், 'எனது இரண்டாவது மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும், மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத்தும் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர்.

அஜு அலெக்ஸ் என்கிற யூடியூபர் தொடர்ந்து என்னைப் பற்றி தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார்' என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் மனைவிகள் மீது போலீசில் நடிகர் பாலா புகார்இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா தனது மனைவி கோகிலாவுடன், கொச்சியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் கொடுத்துள்ளார்எனது இரண்டாவது மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும்,… pic.twitter.com/o7o5PTHmFD

— Thanthi TV (@ThanthiTV) March 18, 2025
Read Entire Article